போரூர் : ஜனவரி ௦4, 2023
சென்னை போரூர் பகுதியில் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது வழியில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்த இளம்பெண் மீது கனரக வாகனம் ஏறியதால் சம்பவ இடத்தில பலியானார் உடன் இருந்த சகோதரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப் பட்டு வருகிறது குறித்து மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவிக்கிறது மேலும் சரியில்லாத சாலைகளை சீர் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
சென்னை போரூரைச் சேர்ந்த இன்ஜினியர் ஷோபனா, தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் மொபட்டில் சென்றபோது, மணல் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தகவல் மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்தப் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாக பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது இளம் பெண் உயிரிழந்துவிட்டார். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, மாநிலம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் நேரிடும் விபத்துகளால் ஏராளமானோர் பலத்த காயமடைகின்றனர். சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இனியாவது சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது. – மக்கள் நீதி மய்யம்
சென்னையில் விபத்து: டூவீலரில் பயணித்த சோகோ நிறுவன இளம் பெண் என்ஜினீயர் பலி | Indian Express Tamil
சென்னை மதுரவாயல் அருகே நேற்று விபத்தில் பெண் உயிரிழந்த வழக்கில் 2 ஓட்டுநர்கள் கைது – Dinakaran