சென்னை : ஜனவரி 3௦, 2௦23

இந்திய தேசப் பிதா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் காந்தியடிகளார் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்த நாள். இந்நாளில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திரு சீனிவாசன் அவர்களின் மகனும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்களின் புகழஞ்சலி.

காந்தியை நினைக்காமல், அவரது பெயரை உச்சரிக்காமல் ஒருநாளும் என் வாழ்வில் கடந்ததில்லை. முயற்சித்தால் எவரும் காந்தியாக முடியும் என்பதன் சாட்சியாக எத்தனையோ காந்தியர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவுநாளில் வணங்குகிறேன்.திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்