தென்னாப்பிரிக்கா : ஜனவரி 3௦, 2௦23

சாதிப்பதற்கு ஆண் பெண் என எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பல நேரங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள் நமது நாட்டில் விளையாட்டரங்கில் கோலோச்சிய மகளிர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட்டில் உலககோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிகெட் குழுவிற்கு உளமார்ந்த வாழ்த்துகளை பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது பாராட்டுக்குரியது. முதல்முறையாக நடத்தப்பட்ட போட்டியிலேயே, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. – மக்கள் நீதி மய்யம்