நாமக்கல் : குமாரபாளையம் – ஜனவரி 22, 2௦23

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் நிகழ்வாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து பேசினர்.

அதனைத் தொடர்ந்து நாமக்கல் (மேற்கு) மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மூலம் ஏற்பாட்டில் குமாரபாளையம் பகுதியில் பிரம்மாண்ட அளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர்களான திரு மௌரியா மற்றும் திரு தங்கவேலு ஆகியோர் தலைமையில் மாநில செயலாளர்கள் திரு கவிஞர் சிநேகன், திரு Dr. மயில்சாமி, திருமதி மூகாம்பிகா ரத்தினம்,, திரு ராகேஷ், திருமதி Dr.அனுஷா ரவி, மற்றும் மண்டல செயலாளர் திரு ரங்கநாதன், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், வட்ட, கிளை ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலரும் சிறப்புரையாற்றினார்கள்.

பொதுகூட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் அளிக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் மக்களுக்காக மக்கள் நீதி மய்யம் நடத்தியது. இதில் கொஞ்சமும் சோர்வடையாமல் பொறுமையாக அமைதியாக பேசுவதை உன்னிப்பாக கவனித்து அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.