சென்னை : பிப்ரவரி 27, 2023

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரியின் 42 ஆவது ஆண்டு கல்லூரி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பை ஏற்று கலந்துகொண்ட திரு கமல்ஹாசன் அவர்கள் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடினார்.

இந்தியர்களின் சராசரி வயதிற்கும்,பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயதிற்குமான வித்தியாசம் பெரிது. இளையோரின் பங்களிப்பு அரசியலில் அதிகரிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி MCC கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். மாணவர்களிடம் கரைபுரண்டோடிய உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது.திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

ஆங்கிலத்தில் உரையை துவங்கிய கமல்ஹாசன் அவர்களை அங்கே குழுமியிருந்த மாணவர்கள் அனைவரும் ஒரு மனதாக தமிழில் உரையாடும்படி உரத்த கோஷத்தின் எழுப்பி கேட்டுக் கொண்டார்கள். அதனை ஏற்றுக் கொண்டு தமிழில் தன உரையைத் தொடர்ந்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக நான் பங்கு கொண்டாலும் உங்களுடன் வெறுமனே பேசிச் செல்லவோ அல்லது அறிவுரை வழங்கவோ நான் வரவில்லை மாறாக உங்களின் சிறந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவே நான் முழுதும் ஆசை கொள்கிறேன் என்றார். மேலும், எனக்கு திறமை இருப்பதால் இங்கே வந்துள்ளதாக நீங்கள் நினைக்கக் கூடும். அது போல் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் கனவும் லட்சியமும் இருக்கலாம். எனது பெற்றோர்கள் எனது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்யவில்லை அதே போல் நானும் அவர்களுக்காக எந்த முடிவையும் எடுக்கவில்லை. நான் வளர்ந்தது முதல் எனக்கான பாதையை நானே தீர்மானித்துக் கொண்டேன். அதே போல் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்தையும் சிக்சர் என அடிக்க முடியாது அதனால் உங்களுக்கான பாதையை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.

நமது இந்திய மக்களின் சராசரி வயது 29 ஆக இருக்கிறது (அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கணக்கிட்டால் 29 வயதின் பருவத்தில் இருக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மொத்தத்தில் 5௦ விழுக்காடு வரியில் இருக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது). அது போன்றே இந்திய பாராளுமன்றத்தில் நுழையும் உறுப்பினர்களின் சராசரி வயது 54 வயதினர் என்பதாகவே இருந்து வருகிறது. இதைக் குறிப்பிட்டு பேசியவர் இளைஞர்கள் ஆன பெண் அல்லது ஆண் எவராக இருந்தாலும் அரசியலில் ஈடுபட வேண்டும். மட்டுமில்லாமல் அரசியல் உங்களை வழிநடத்தக் கூடாது மாறாக இளைஞர்கள் ஆன நீங்களே அரசியலை வழிநடத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்படி நீங்கள் இந்த ஜனநாயக அரசியலை கையில் எடுத்துக் கொண்டு என்னிடம் நாங்கள் அதை பத்திரமாக பார்த்துக் கொள்வோம் என்று உறுதியளித்தால் நான் ஒதுங்கிக் கொண்டு இளைஞர்களுக்கு வழி விட்டு ஓய்வு எடுத்துகொள்வேன்.

அதே போல் மாணவர்களாகிய நீங்கள் 1௦௦ சதவிகிதம் உங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தால் உங்களை என் தோள்களில் தாங்குவேன் என்றும் பேசியவர் மேலும் எனக்கு ஓட்டுப் போடுங்கள் கேட்க மாட்டேன் என்றும் தெரிவித்தது தான் ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் பெருந்தன்மையுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/live/Axi01TRClJY?feature=share

’அரசியலுக்கு இளையவர்கள் வந்தால் முதியவர்கள் ஒதுங்கிக் கொள்வோம்’ -கமல்ஹாசன் (hindutamil.in)

ஆங்கிலத்தில் பேசிய கமல்… தமிழ்… தமிழ் என கத்திய மாணவர்கள்… அடுத்த நொடியில் நடந்த ருசிகரம்! | Students forced Actor Kamal to speak in Tamil at the college function – Tamil Filmibeat

கிறித்தவ கல்லூரி விழாவில் கலந்து கொள்வதில் பெருமை… இந்தியர்களின் சராசரி வயது 29 தான்..! – கமல்ஹாசன் பேச்சு..!! – Seithipunal