ஈரோடு : பிப்ரவரி, 15 2023

ஈரோடு இடைதேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் வருகிற 19 ஆம் தேதியன்று ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் திரு இளங்கோவன் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பிரச்சாராம் செய்யவிருக்கிறார். அது தொடர்பாக பிரச்சாரம் செய்யவிருக்கும் பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகளை செய்திட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதன் தலைமைப் பொறுப்பாளரான திரு அருணாசலம் அவர்களின் தலைமையில் தனியார் அரங்கு ஒன்றில் இன்று நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் திரு தங்கவேலு, மாநில செயலாளர்கள் திருமதி மூகாம்பிகா ரத்தினம், திருமதி அனுஷா ரவி, திரு மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மக்கள் நீதி மய்யம் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.