ஈரோடு : பிப்ரவரி 17, 2௦23

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் மாரடைப்பால் மறைந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளாராக திரு.EVKS இளங்கோவன் அவர்களை போட்டியிட களம் இறக்கியுள்ளது. எனவே வரவிருக்கும் சட்டமன்ற இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள் ஆகியோர் ஒன்று கூடி முடிவு செய்த பின் தலைவரின் ஆணைப்படி தேர்தல் பொறுப்பாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலரையும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திரு இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவு திரட்ட முகாமிட்டுள்ளனர்.

வரவிருக்கும் 19 ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் திரு கமல்ஹாசன் அவர்கள் பிரச்சாரம் செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் செய்துள்ளார்கள்.