சென்னை : மார்ச் 1௦, 2௦23

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட திரு.EVKS இளங்கோவன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கில் பரப்புரை செய்தார் அப்போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு உரையை கேட்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் திரு.EVKS இளங்கோவன் அவர்கள்.

அதனைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும்பொருட்டு இன்று திரு இளங்கோவன் அவர்கள் ம.நீ.ம அலுவலகத்திற்கு வந்து தலைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து உளமார நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச்செய்தி :

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு.EVKS இளங்கோவன் அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான திரு. கு.செல்வப்பெருந்தகை அவர்களுடன் இன்று என்னை சந்தித்தார். எனது ஈரோடு பரப்புரைக்காக நன்றி தெரிவித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு சட்டமன்றத்தில் ஒலிக்க இருக்கும் அவரது குரலுக்காகக் காத்திருக்கிறேன் என அவரை வாழ்த்தினேன். – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்