சென்னை : மார்ச் ௦7, 2௦23
வணக்கம் தோழர்களே …
ஒரு சின்ன தத்துவத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்…
“கூட்டத்தில் உள்ள அனைவரும் நல்ல வினைகளை செவ்வென செய்வதற்கு –
அந்த கூட்டத்தின் தலைவன் பேச்சை கேட்க வேண்டும்.”
இது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை
அந்த கூட்டத்தில் உள்ள அனைவரும்
கூட்டாக பிழை இல்லாமல் அரசியல் பழக வேண்டும் என்பது…
சரி, விஷயத்துக்கு வருவோம். இன்று மக்கள் நீதி மய்யம் எனும் சிறந்த அரசியல் கட்சியில் சில தொண்டர்களுக்கிடையே பெரும் சலசலப்பு.
ஏன் ?
ஏன் இந்த குழப்பம் ?
5 வருடங்களாக தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள் காட்டிய வழியில் சென்ற சில தொண்டர்கள் –
இன்று திமுக + காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்ததால் குழம்பிப் போயுள்ளார்கள்.
ஏன் கூட்டணி குறித்து வினவும் பொது மக்களை குழப்ப வேண்டும் ?
எதற்கு கூட்டணி ?
கூட்டணி வைப்பதன் நன்மைகள் தான் என்ன ?
ஏன் குழம்ப வேண்டும் ?
இது போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடைகளை தேடி கண்டுபிடித்து எதிரிகளின் முகத்திரைகளை கிழித்து எறிய வேண்டாமா தோழர்களே ??!!
“கூட்டணி வைப்பதால் நிச்சயம் மய்யத்திற்கு இழுக்கு” என்று கூறும் சில மய்யத் தொண்டர்கள், மேற்சொன்ன கேள்விகளின் விடைகளை மய்ய நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டு பழைய வேகத்தில் மய்யம் கொண்டு மக்கள் மனதில் சிம்ம சொப்பனமாக அமர வேண்டாமா ?!!
அறிவோம்..
கூடுவோம்..
வெல்வோம்..
நாளை நமதே…
எழுத்து : மர்மயோகி