கடவுள் தொழுவது அவரவர் உரிமை. இதிலும் தம் ஆதிக்கத்தை காண்பிப்பது மடமையின் உச்சம் அதிகாரத்தின் மிச்சம் எனலாம்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தப்பாடி எனும் ஊரில் நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது குறிப்பிட்ட திரைப்பட பாடலை ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்ததால் தாக்கியதை கேள்விப்படுகையில் மனம் வேதனையடைகிறது மேலும் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் செல்ல முற்பட்டபோது அந்த வாகனத்தையும் தடுத்து நிறுத்தி மீண்டும் தாக்கியது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.
உயர்வும் தாழ்வும் சொல்லி மனிதம் கொள்ளும் இத்தகைய நபர்கள் இருப்பது வீணே !