கோவை : மார்ச் ௦8, 2023

மக்கள் நீதி மய்யம் – கோவை தெற்கு நற்பணி இயக்க அணி மாவட்ட அமைப்பாளர் நிர்வாகி மற்றும் நம்மவர் தலைவரின் தீவிர விசுவாசியுமான திரு பஷீர் அவர்கள் உடல்நலகுறைவால் இயற்கை எய்தினார்.

கமல்ஹாசன் நற்பணி இயக்கம் துவக்கப்பட்டதில் இருந்தே அதில் தன்னை ஈடுபடுத்தி நற்பணிகளில் மிகச் சிறப்பாக தொண்டாற்றிய திரு பஷீர் அவர்கள் மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டதில் இருந்தே தன்னை கட்சிப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு அதிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் திடீரென இன்று காலை இயற்கை எய்தினார். அன்னாரது மறைவை அறிந்து மிகுந்த வேதனையடைந்தனர் தலைவரும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும். துணைத்தலைவர் திரு தங்கவேலு அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் பலரும் மறைந்த திரு பஷீர் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது பூவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

திரு பஷீர் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது மய்யத்தமிழர்கள்.com