மார்ச் : 15, 2௦23
பாரதியார் பாடிய பாடல்கள் அவர் கண்ட கனவுகள் எல்லாம் மெய்ப்பட வேண்டும் என விரும்பினார் ஆனால் இயற்கையும் அதை அப்போதைக்கு செய்ய விடாமல் அவருக்கு மரணத்தை அளித்தது.
பல கல்வியாளர்கள் கற்பதன் மகத்துவத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கல்வியை கற்பதற்கு வசதியின்றி இருக்கும் பல ஏழைப் பிள்ளைகளை படிப்பதற்கு உதவிகள் செய்து வருகின்றனர். மன்னராட்சி காலங்களில் புலவர்களை காத்த புரவலர்கள் போல் இன்றுவரையில் கல்வியை அனைவரும் கற்க வேண்டி அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் புரவலர்கள் பலர் உதவி வருகிறார்கள்.
அது போன்ற ஓர் புரவலர் தான் தமிழ்நாட்டின் மிகப்பெரும் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்கள். அட இது தான் தெரியுமே அவர் நிறைய நற்பணிகளை தனிப்பட்ட முறையிலும் தனது தலைமையில் உள்ள கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் மூலமாக அதில் பங்கு கொண்டுள்ள ரசிகர்கள் பலரும் இன்றும் பல நற்பணிகளை இடைவிடாமல் செய்து வருகிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை. அதனை வெளியுலகிற்கு விளம்பரம் செய்வதில்லை.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதாய் தொடர்ந்து வரும் நற்பணிகள் மக்கள் நீதி மய்யம் எனும் அரசியல் கட்சியாக உருவெடுத்த பின்னர் ரசிகர்களும் தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் கடல் கடந்து வாழும் பலரும் சத்தமில்லாமல் உதவிகள் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் சற்று பின்நோக்கி சென்றால் அதாவது கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் 1995 ஆண்டில் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் அமைந்திருந்த சிதிலமடைந்த பள்ளியொன்றை தனது சொந்த செலவில் புதுப்பித்துத் தந்தார். பெரும் பாரம்பரியம் உள்ள ஓர் குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்த கமல்ஹாசன் அனைவரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தது பின்னர் சூட்டிகைக்கு பெயர் போன வளர்ச்சி சேட்டைக்கு பஞ்சமில்லை. தந்தை பிரபல வழக்கறிஞர் அதிலும் காந்தியாரின் கொள்கைகளை பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். கமல்ஹாசன் அவர்களின் மூத்தவர்களான அண்ணன்கள் மற்றும் அக்கா என அனைவரும் படித்து பட்டம் பெற்றவர்கள். தனது இளமைப்பருவத்தில் பரமக்குடியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் கல்வி கற்றார். பின்னர் தனது மூத்தோர்களின் உயர்கல்வி கற்பதை கருத்தில்கொண்டு குடும்பத்தோடு சென்னைக்கு குடிபெயர்ந்தனர். சென்னைக்கு வந்ததில் இருந்து சாந்தோமில் உள்ள பள்ளியில் கல்வி கற்றார். அவரிடம் இருந்த பன்முகத் தன்மையை உணர்ந்து கொண்ட தந்தையாரின் விருப்பபடி திரைப்படத்துறையிலும் நடனத்தின் பால் ஈடுபாடு கொண்டார். அதன் பின்னர் பல காலகட்டங்களில் தன்னை மெருகேற்றி கொண்டு திரைத்துறையில் முத்திரை பதித்து வருகிறார்.
ஆரம்பம் தொட்டே தனது சொந்த வருமானத்தில் இருந்து நற்பணிகள் செய்து வருகிறார். அதன்படி சொந்த ஊரான பரமக்குடியில் ஆரம்பக் கல்வி கற்ற பள்ளிக்கூடத்தின் நிலைமை பாழைடைந்து கிடப்பதாக கிடைத்த தகவல்களை தொடர்ந்து அதனை சீரமைத்துத் தர வேண்டி அதற்கான முன்னேற்பாடுகளை துவக்கி சுமார் 7 லட்சம் செலவில் புதுப்பித்துத் தந்தார். கிட்டத்தட்ட பல கோடிகளைத் தொடும். எதையும் விளம்பரம் செய்து கொள்வது பிடிக்காது சுயதம்பட்டம் செய்வதும் ஆகாது. உதவிகளைப் பெற்றவர் சொன்னால் தான் தெரியவரும். அது போல் தான் இதுவும். ஒரு கை கொடுப்பதை மறு கை அறியாமல் செய்துவிடுவார் நம்மவர்.
நன்றி : FB/Kamalhaasan Data Bank & Nammavar Fans