புது தில்லி – ஏப்ரல் 28, 2023
இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி அவர்கள் வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர். இந்திய தேசிய ஒற்றுமைக்காகவும் சாதி மதம் கடந்து எல்லோரும் சமம் எனவும் சகோதரத்துவம் கொண்டு திகழ வேண்டும் என்றும் ஆளும் மத்திய பிஜேபி அரசின் பாசிச அடக்குமுறைகள் மத வேற்றுமைகள் உள்ள ஆட்சியின் போக்கினை கண்டித்து இறையாண்மையை பாதுகாக்கவும் முன்னெடுத்த பாரத் ஜோடோ யாத்ரா மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது நாடு முழுதும் எழுச்சியை காண முடிந்தது. இதனையொட்டி திரு.ராகுல்காந்தி அவர்கள் தன்னை போன்றே இந்த நாட்டின் மீதும் மதச்சார்பற்ற நல்லிணக்கம் கொண்டவராக திகழும் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களை இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் பங்குகொள்ளுமாறு அழைத்தார். அவரது அழைப்பினை ஏற்று தலைவரும் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். புதுதில்லி செங்கோட்டையின் முன்பாக அமைக்கபட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் அமர்ந்திருக்க இந்த யாத்திரையின் நோக்கமும் அதனால் ஏற்படப்போகும் மதச்சார்பற்ற தன்மை குறித்தும் மிகப் பிரமாதமாக உரையாற்றினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திரு இளங்கோவன் அவர்களின் மகனும் ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு திருமகன் மாரடைப்பால் மரணமடைந்தார். அதனால் இந்திய தேர்தல் ஆணையம் அத்தொகுதியை காலியாக அறிவித்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. அதனால் காங்கிரஸ் கட்சி இளங்கோவன் அவர்களை வேட்பாளாராக போட்டியிடச் செய்தது அதற்காகவும் திரு ராகுல்காந்தி அவர்கள் திரு கமல்ஹாசன் அவர்களை தேர்தல் பரப்புரைக்கென அழைப்பு விடுத்தார் அதனை ஏற்ற தலைவரும் ஈரோடு கிழக்கில் பரப்புரை செய்தார், பல இடங்களில் பரப்புரையின் போது கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கூடியது தேர்தலில் இளங்கோவன் அவர்கள் மிகபெரும் வெற்றி அடைந்தார்.
தற்போது விரைவில் கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிஜேபி யின் ஆளும் அரசின் மீதான அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்ய உத்தேசித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மேலிடமான திரு ராகுல்காந்தி அவர்கள் மீண்டும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களை கர்நாடகாவில் தேர்தல் பரப்புரை செய்திட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பினை அன்புடன் ஏற்றுக் கொண்ட தலைவர் கர்நாடகாவிற்கு வருவதாக இசைந்துள்ளார். இதனை குறித்து மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்திலும் மற்றும் அறிக்கைகள் மூலமாகவும் வெளியிட்டுள்ளது.