திருச்செந்தூர் : ஏப்ரல் 24, 2023

கடந்த சில மாதங்கள் முன்பு மாநில செயலாளர் & மாநில இணைச்செயலாளர் ஆகியோர் தலைமையில் மாநிலம் மாவட்டங்கள் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. அதில் பல நிகழ்வுகள் ஆலோசிக்கப்பட்டது. நற்பணி, மக்களின் தேவைகளான குடிநீர், சுத்தம் சுகாதாரமான சூழல், தூய்மைப்படுத்துவது குறித்து உள்ளூர் நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தல் என பல வகைகளில் நம் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என கலந்துரையாடபட்டதை தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் பயன்பெறும் வகையிலும் கொடிக் கம்பம் நடப்பட்டு அதில் மய்யக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.

“தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தோப்பூர் கிராமத்தில் மற்றும் காயல்பட்டினத்தில் மய்யக்கொடி ஏற்றம் மற்றும் மக்களுக்கான நலப்பணிகள் 23.4.2023 அன்று நடைபெற்றது. விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு.செல்லபாண்டி மற்றும் நெல்லை மண்டல தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு.M.K.ராஜன் பங்கேற்றனர். தோப்பூர் நிகழ்ச்சி ஏற்பாடு: ஒன்றிய செயலாளர் திரு.நடராஜன், மாவட்ட செயலாளர் திரு.அலெக்ஸ் & மாவட்ட நற்பணி இயக்க அமைப்பாளர் திரு.ஸ்ரீதர் காயல்பட்டினம் நிகழ்ச்சி‌ ஏற்பாடு: நகர செயலாளர் திரு.பொன்ராஜ் நிகழ்ச்சியில் கட்டமைப்பு, நற்பணி இயக்க அணி & தொழிலாளர் அணி உட்பட மய்ய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்”. – மக்கள் நீதி மய்யம்