தூத்துக்குடி : ஏப்ரல் 24, 2023

மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டு 6 ஆண்டுகள் வீறு நடைபோட்டுக் கொண்டு வருகிறது. கட்சியை மென்மேலும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில செயலாளர்கள் தலைமையில் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய கிராமங்கள் தோறும் பல நற்பணிகளும், அத்தியாவசிய தேவைகளை அரசின் குறிப்பிட்ட நிர்வாகத்தினை வலியுறுத்தி அதனை செய்து முடிக்க வைக்கின்றனர் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கட்சி நிகழ்வுகளில் மிக முக்கியமான மய்யக்கொடி ஏற்றி வைக்கப்படுகிறது. அந்த வகையில் ஏரல் நகரம் சூரை வாய்க்கால் மற்றும் காந்திசிலை அருகில் 23.04.2023 அன்று நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு நாகராஜன் அவர்கள் தலைமையில் மய்யக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஏரல் நகரம் சூரை வாய்க்கால் மற்றும் காந்தி சிலை அருகில் 23.4.2023 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன் தலைமையில் மய்யக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு: ஏரல் நகர செயலாளர் திரு.பிரபாகரன் நிகழ்ச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் திரு.செல்லபாண்டி மற்றும் நெல்லை மண்டல தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு.MK.ராஜன் அவர்களுடன் கட்டமைப்பு, நற்பணி இயக்க அணி & தொழிலாளர் அணி உட்பட மய்ய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.மக்கள் நீதி மய்யம்