சோழிங்கநல்லூர் : ஏப்ரல் 17, 2௦23

நேற்று (16.04.2023) சோழிங்கநல்லூர் தொகுதியில் பெருங்குடி, கந்தன்சாவடி, மேட்டுக்குப்பம், மேடவாக்கம் – விஜயநகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர் ஆகா வருகை தந்த துணைத்தலைவர் திரு மௌரியா அவர்களும் மற்றும் பொதுச்செயலாளர் திரு அருணாச்சலம் அவர்கள் மேற்கண்ட பகுதிகளில் கட்சி கொடிகளை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினர். இதனை முன்னிட்டு தொகுதி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இது குறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் ஊடக செய்திகள் மூலம் தெரிவிக்கபட்டுள்ளது.

சோழிங்கநல்லூர் தொகுதியில் நேற்று மக்கள் நீதி மய்யம் சார்பாக பெருங்குடி, கந்தன்சாவடி, மேட்டுக்குப்பம், மேடவாக்கம் – விஜயநகரம் ஆகிய 4 இடங்களில் நம் மய்யக்கொடி துணைத்தலைவர் திரு. மௌரியா & பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்களால் ஏற்றப்பட்டது. மாநில செயலாளர்கள் திரு. சிவ இளங்கோ, திரு. நாகராஜன், திரு. வைத்தீஸ்வரன், திரு. கிருபாகரன், காஞ்சி மண்டல பொறியாளர் அணி அமைப்பாளர் திரு. அரவிந்தராஜ், மாவட்ட செயலாளர் திரு. பிரவின் மார்க்கஸ், சமூக ஊடக மாவட்ட அமைப்பாளர் திரு.சுதீப் & மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மக்கள் நீதி மய்யம்