புதுச்சேரி : ஏப்ரல் 30, 2023

மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநிலத்தில் ஊர்வலம், பல இடங்களில் கட்சிக் கொடியேற்றம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மய்யம் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு சந்திரமோகன் தலைமையில் துணைத்தலைவர்கள் திரு தங்கவேலு, திரு மௌரியா அவர்களின் முன்னிலையில் மாநில நிர்வாகிகள் மற்றும் அணைத்து அணிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொள்ள சிறப்பாக நடைபெற்றது மேற்கண்ட பல நிகழ்வுகள். இவை மட்டுமல்லாது மறைந்த மய்யம் நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அதனைப் பற்றிய புகைப்படத் தொகுப்பு இதோ.

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்டம் 30-4-23 ஞாயிறு மாலை 6 மணியளவில் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் G.R.சந்திரமோகன் தலைமையில்,கட்சி கொடி ஏற்றி, ஊர்வலத்துடன் சிறப்பாக நடைபெற்றது.மாநிலத் துணைத் தலைவர்கள் R. தங்கவேலு,A.G. மெளரியா ஆகியோர் கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது, புதிய நிர்வாகிகள் நியமிப்பது மற்றும் உறுப்பினர் சேர்க்கை, கட்சிக் கொடிகளை ஏற்றுவது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சமீபத்தில் மறைந்த நற்பணி இயக்க பொறுப்பாளர் சரவணன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. பொதுச்செயலாளர் முருகேசன்,மாநிலச் செயலாளர்கள் இராம.ஐயப்பன், சக்திவேல்,ரூபன் தாஸ், ருத்ரகுமாரன் மற்றும் சக்திவேல் பட்டுரோஸ், கோபாலகிருஷ்ணன், பழனிவேலன், இன்னாசி ராக், மகின்பர்வத், கமல் ராஜ், பசுபதி, கமல்செழியன், கமல்பாலா, சுரேஷ், ஜெயந்தி, வாசுகி ஆகியோருடன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.