கோவை : மே 15, 2௦23

நாமே விதை! நாமே விடை! இது நம் நம்மவரின் முழக்கம். 14.05.2023 அன்று காலை 9 மணியளவில், கோவை வடமேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவரின் கரத்தை வலுப்படுத்த வீடு வீடாக சென்று மக்களுக்கு காய்கறி விதைகள் வழங்கபட்டு, புதியதாக உறுப்பினர் சேர்க்கையும் துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்களின் தலைமையில், மாவட்ட செயலாளர் திரு.தம்புராஜ், ஊடகத்துறை மண்டல அமைப்பாளர் திருமதி. ரம்யா வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் நற்பணி இயக்க மண்டல அமைப்பாளர் சித்திக், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், சத்தியநாராயணன், சிராஜ், சுரேஷ், விக்டர், நிர்மலா, ஆண்டாள், வேல்முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்