மே 14, 2023

வடசென்னை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு இடங்களில் மய்யக்கொடி ஏற்றியும் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை துணைத்தலைவர் திரு A.G மௌரியா மற்றும் நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு நாகராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

வட சென்னையில் 14.5.2023 அன்று 1. மின்ட் பஸ் ஸ்டாண்ட் 2. எம்.எஸ் நாயுடு தெரு 3. கொருக்குப்பேட்டை RS 4. மீனாம்பாள் நகர் ஆகிய 4 இடங்களில் மய்யக்கொடி ஏற்றி, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கி, நடைபாதை வியாபாரிகள் இருவருக்கு நிழற்கொடைகளை வழங்கினார்கள் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா மற்றும் நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜ் அவர்கள். மாவட்ட செயலாளர் திரு மாறன், தொழிலாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் சேகர், மாவட்ட அமைப்பாளர் ராமசேகர், மாவட்ட துணைச் செயலர் கவிராஜ் & ஆதிதிராவிடர் நல அணி மாவட்ட அமைப்பாளர் சோலை ஆகியோர் ஏற்பாட்டில் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர, வட்ட கிளை மய்ய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/Maiatamizhargal/status/1658091052610330627?s=20