சென்னை : ஏப்ரல் 12, 2௦23

நடப்பாண்டு மீன்பிடித் தடைக்காலம் வரும் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கும். இதனால் சுமார் 15௦௦௦ மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லாமல் அவர்களின் தினசரி வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அதனை அவர்களால் ஈடுகட்ட இயலாது அதற்கான நிவாரண தொகையாக மீனவர்கள் கோரும் ரூ.8000 உடனடியாக வழங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக மீனவர்கள் கோரிக்கையான ரூ.8,000 வழங்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அறிக்கை.