சென்னை – நவம்பர் 21, 2௦22

மீன் – எந்த பக்க விளைவும் இல்லாத மிகச் சத்துள்ள மாமிசம். பரபரக்கும் ஞாயிறுகளில் வாங்கிய மீன்களை பக்குவமாக ஆய்ந்து பிடித்தமாதிரி சமைத்து உங்கள் தட்டுக்களில் வந்து சேரும் அவைகளை பிடித்துத் தரும் மீனவர்கள் என்பவர்கள் தம் வாழ்வை தினம் தினம் பணயம் வைத்து தான் கடலில் இறங்கி மீன்பிடித்து வருகிறார்கள். அவர்கள் கரையைத் தொடும்வரை அவருடைய வீட்டின் மனைவி மற்றும் பிள்ளைகள் மனதினுள் உருகிக் கொண்டிருப்பார்கள். ஏன் என்றால் கடல் எப்படி வேண்டுமானாலும் புரளும், ஆர்ப்பரிக்கும், கொந்தளிக்கும் படகுகளை புரட்டிப்போடும். கடும் காற்றும் மழையும் அவர்களை திசைமாறி இழுத்துப்போகும். இன்னும் சொல்லபோனால் பல வேளைகளில் அண்டை நாட்டு கடலோரப்படைகளின் இரக்கமற்ற துப்பாக்கிக் குண்டுகள் கூட அவர்களின் உயிரைக் குடித்துவிடும். எதுவும் நிரந்தரம் இல்லை என்பதற்கு மீனவர்களின் தினமும் போராடும் வாழ்வே சாட்சி.

தமிழகத்தில் கடலோரங்களில் மீன் பிடிக்கும் பல மீனவர்களை இலங்கை கடற்படை ரோந்துப்பிரிவு சந்தேகத்தின் காரணமாக கைது செய்து சிறையில் அடைத்தும் அல்லது கண்டவுடன் சுட்டுக் கொன்றும் இருகிறார்கள் என்பதை வருடந்தோறும் புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கும். ஆனால் இதே வேளையில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் அறியாமல் நம் எல்லைக்குள் வந்துவிட நேர்ந்தால் நமது படைகள் கண்ணியமாய் செயல்படும் எச்சரித்து அனுப்பிவைக்கும் இதற்கும் விவரங்கள் உண்டு என நம்பலாம். கடல் என்ன தார் காய்ச்சி ஊற்றிய நெடுஞ்சாலையா என்ன துல்லியமாய் கோடு தாண்டிப் போகாமல் இருக்க.

மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் பல திட்டங்களை வடிவமைத்துள்ள மத்திய மாநில அரசுகள் அவைகளில் பலவற்றை மிகச்சரியாக அமல்படுத்தினால் நலன் காக்கப்படும், இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் மீன்பிடி தடைகளின் அவர்களின் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யமுடியும். உயிரைப் பணயம் வைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபடும் அவர்களுக்கு மிகக்கடுமையான இயற்கைச் சூழல்களை உணர்ந்து இரு அரசுகளும் செயல்படவேண்டும். மீனவர்களின் நலன் காக்க மக்கள் நீதி மய்யம் என்றும் துணை நிற்கும்.

வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க உறுதியேற்போம். உலக மீனவர் தினம் மக்கள் நீதி மய்யம் வாழ்த்து. துணைத் தலைவர் திரு தங்கவேலு அவர்கள் அறிக்கை.

கடந்த 2௦21 இல் செப்டம்பர் மாதம் நாகை மாவட்டம் நாகூர் பட்டினசேரியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தன்னுடன் 11 பேருடன் இணைந்து தனது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராமல் கேரளா கடலோர எல்லையில் படகும் வலைகளும் சிக்கிக்கொண்ட சம்பவம் குறித்தும் அம்மீனவர்களின் வாழ்வாதார நலன் காத்திட வேண்டும் என கோரிக்கை எழுப்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் விடுத்த அறிக்கை.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் | MNM on fishermen issue – hindutamil.in