சென்னை – நவம்பர் 2௦22

மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ செவாலியே நம்மவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் 68 ஆவது பிறந்த நாள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியர்கள் வாழும் உலகின் பல நாடுகளில் நவம்பர் மாதத்தினை நற்பணி மாதமாக அறிவித்து பொருளாதார நலிவடைந்த மக்களுக்கு கல்வி பயிலும் குழந்தைகளுக்கு வீட்டு உபயோக மளிகை பொருட்கள், நோட்டு பென்சில் புத்தகங்கள் நன்கொடையாக அளித்து வருகிறார்கள் எண்ணிலடங்கா ரசிகர்களும் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள்.

பல பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் தொட்டிகள் நிறுவுவது, மரக்கன்றுகள் நடுவது இன்னும் ஒரு படி மேலே சென்று கண் மருத்துவ சிகிச்சை ஆலோசனைகள், பொது மருத்துவ சிறப்பு முகாம்கள் மற்றும் இரத்ததானம் முகாம்கள் நடத்தி வருகின்றனர். அவர்களின் இந்த அருபெரும் சேவைகளை என்றும் தலைவர் அவர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றார். இவ்வாறான நற்பணிகளை செய்து வரும் அவர்களை என் உளமார ஆரத்தழுவி வரவேற்று எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டே வருவேன் என்றும் பல மேடைகளில் சிலாகித்தும் பெருமை கொண்டும் பேசியுள்ளார். கடந்த 7 ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு அறுபுதமான பணிகளைச் செய்து வரும் அனைவரயும் வாழ்த்தி தமது உளமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது மய்யதமிழர்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த பணிகளின் காணொளி மற்றும் புகைப்படத் தொகுப்புகளை உங்களின் பார்வைக்கு இங்கே பதிவு செய்கிறோம்.

சிவகாசி நற்பணி இயக்கம்