சென்னை : ஏப்ரல் 24, 2023

நற்பணிகள் செய்திட மக்கள் நீதி மய்யம் என்றும் தயங்கியதில்லை. சுட்டெரிக்கும் வெயில் சோர்ந்து போகும் மக்களுக்கு தாகம் தீர்க்கும் நற்பணி காரியம் செய்து முடிக்கிறது திரு.வி.க நகர் தொகுதி நிர்வாகிகள்.

பட்டாளம் பகுதியில் மய்யக்கொடி ஏற்றியும் கோடை கால நற்பணியான நீர் மோர் பந்தல் நிறுவி வெள்ளரிக்காய் மற்றும் பழரசம் அளித்தனர்.

“மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க அணி & கட்டமைப்பு இணைந்து திரு.வி.க நகர் தொகுதி பட்டாளத்தில் 23.4.2023 அன்று நடத்திய கோடை கால நற்பணி திருவிழா, இரண்டு இடங்களில் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள் மய்யக்கொடி ஏற்ற சிறப்பாக நடைபெற்றது. HQ மாநில செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், நற்பணி அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. ராஜேஷ்கண்ணா, மாவட்ட செயலாளர் உதயகுமார், மாவட்ட சமூக ஊடக அணி அமைப்பாளர் திரு.E.N.பாபு உடன் மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு : திரு.N.G.மாறன், நற்பணி இயக்க அணி மாவட்ட துணை அமைப்பாளர்”.