பள்ளிக்கரணை : ஏப்ரல் 16, 2௦23

மநீம மாணவரணி நடத்திய இலவச வேலைவாய்ப்பு முகாம். நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க ம.நீ.ம மாணவரணி சார்பாக பள்ளிக்கரணை – ஸ்ரீ ஆனந்தாஸ் பார்ட்டி ஹாலில் நேற்று இலவச வேலை வாய்ப்பு முகாம் 15 தொழில் நிறுவனங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சுமார் 100 மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்ற பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியை துணைத் தலைவர் திரு. மௌரியா அவர்கள், பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள், மாணவரணி மாநில செயலாளர் திரு. ராகேஷ்குமார் ஆகியோரின் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர். மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம், வழக்கறிஞர் திரு. ஶ்ரீதர், சிறப்பு அழைப்பாளர்கள் திருமதி. ஸ்ரீராதா, திரு. மயில்வாகனன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் திரு. பிரவீன் மார்க்கஸ் முன்னிலையில் நடைபெற்றது. காஞ்சி மண்டல மாணவரணி அமைப்பாளர் திரு. சங்கர் ரவி அவர்கள் நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.