சென்னை : செப்டெம்பர் 25, 2௦23

குருதி தானங்கள் செய்வது குறித்தான அச்சங்கள் எல்லாம் கடந்து பல மாமாங்கம் ஆகிப் போனது. இப்போது இரத்ததானம் விழிப்புணர்வை அதன் தேவையும் அவசியமும் ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். யார் எவர் எனத் தெரியாத போதும் எங்கிருந்தோ ஒருவர் தரும் இரத்தம் வேறு எங்கோ சிகிச்சை பெறுபவர் இருக்ககூடும் அவரது உயிர் காப்பாற்றப்படும். இது போல் தான் உடல் உறுப்புக்கள் தானமும். பல வருடங்களுக்கு முன்பு ஹிதேந்திரன் எனும் இளைஞர் விபத்தில் சிக்கி படுகாயமுற்று சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார். அவரது பெற்றோர்கள் உடனடியாக செய்த மகத்தான செயல் மரணமடைந்த தங்கள் மகனின் உறுப்புகள் செயலில் இருக்கும் போதே வேறு ஒரு பெண் குழந்தைக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை நடைபெற வேண்டியிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த மருத்துவர் குழு விரைந்து ஆலோசனை செய்து மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் அவர்களின் இதயத்தை சாலை மார்க்கமாக அதிவேகமாக பாதுகாப்புடன் ஆம்புலன்சில் கொண்டு சென்று சிறுமி அபிராமிக்கு பொருத்தப்பட்டது.

2௦௦8 ஆம் ஆண்டு செப்டெம்பர் 2௦ நடந்த விபத்தின் காரணமாக மரணமடைந்த இளைஞர் ஹிதேந்திரன் இதயம் மாற்று அறுவைசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது அதே சமயம் 1௦8 ஆம்புலன்ஸ் சேவையும் பரவலாக்கப்பட்டது. உடல் உறுப்புக்கள் தானம் குறித்த விழிப்புணர்வுகளும் பரவியது. இதுவரை பலரும் உடலுறுப்புகள் தானம் செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இதற்கு முன்னதாக 1995 இல் ஓர் பெண்மணிக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை நடந்ததை தொடர்ந்து முதன்முதலாக தமிழக அரசு மட்டுமே மூளைச்சாவு அடைந்தது குறித்த சட்டத்தை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் கடந்த 2௦௦2 இல் ஆகஸ்ட் 15 அன்று தனது மூத்த மகள் செல்வி ஸ்ருதிஹாசன் அவர்களின் சாட்சிக் கையொப்பமுடன் முன்னிலையில் மெட்ராஸ் மெடிகல் காலேஜ் டீன் டாக்டர் திரு.ரவீந்த்ரநாத் (அரசு மருத்துவக்கல்லூரி இயக்குனர் தலைவர்) அவர்களிடம் தனது உடலை தானமாக தருவதற்கு ஒப்புகொண்ட விண்ணப்பமும் அதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்டு அற்புதமான இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். தங்கள் தலைவரின் இந்த சமூக நலன் கொண்ட செயலில் ஈர்க்கப்பட்டு ரசிகர்கள் மற்றும் கட்சி துவங்கிய பின்னர் தொண்டர்கள் பலரும் உடலுறுப்புகள் தானம் செய்து வருகின்றனர்.

தலைவர் அவர்கள் பல மேடைகளில் இதுகுறித்து பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அதே வேலையில் பலரும் தாமாக மனமுவந்து உடலுறுப்புகள் தானத்தில் தங்கள் பெயர்களை தந்து இணைந்துவருவது கண்ட தமிழக அரசும் அப்படி உடலுறுப்புகள் தானம் செய்பவர்களின் மறைவிற்கு பின்னர் அவர்களை கௌரவிக்கும் விதமாக அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று அரசானை வெளியிட்டுள்ளார் முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள்.

அரசின் இந்த அங்கீகாரத்தை தான் முழு மனதோடு வரவேற்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம். இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்.திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://x.com/ikamalhaasan/status/1706201093112562075?s=20

https://x.com/maiamofficial/status/1706211603199504763?s=20

https://x.com/Veerasimman2/status/1706208638917038187?s=20

https://x.com/maiamdatabank/status/1706228729956233585?s=20

https://x.com/PadmaRavichand1/status/1706212609652039979?s=20

#OrganDonation #DonateLife #OrganDonorHeroes