செய்யாறு : ஆகஸ்ட் 24, 2023

மக்கள் நீதி மய்யம் என்றாலே மக்களுக்கான அரசியல் மட்டுமல்லாமல் நற்பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது சிறப்பு என்பதை மீண்டும் ஒரு முறை காண்பித்துள்ளார்கள் காஞ்சி மண்டல பொறியாளர் அணி. அதன்படி செய்யாறு கிரிதரன்பேட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு தேவைப்படும் அத்தியாவசிய உபகரணங்களை வழங்கியுள்ளார்கள். அதுகுறித்த தகவல்களை மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 24.08.2023 செய்யாறு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி அமைப்பாளர் திரு.அரவிந்தராஜ் அவர்களின் ஏற்பாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. மௌரியா மற்றும் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள் தலைமையில் செய்யாறு கிரிதரன் பேட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தண்ணீர் தொட்டி, உணவு தட்டுக்கள், மின்விசிறிகள், ஆசிரியர்கள் பயன்பாட்டுக்கான நாற்காலிகள் போன்றவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பொறியாளர் அணி டாக்டர். எஸ்.ஆர்.வைத்தீஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார், மேலும் மாநில தொழில் முனைவோர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்கள், காஞ்சி மண்டல விவசாய அணி அமைப்பாளர் திரு.எஸ்.பி.சண்முகம் அவர்கள் மற்றும் நகர அமைப்பாளர் திரு.கே.கோகுலமுகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அவர்கள் மாணவர்கள் இடையே கலந்துரையாடினார்கள். மேலும் பள்ளியின் தேவைகளை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி.தேன்மொழி (பொறுப்பு), பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.துரை மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam #மய்யநற்பணிகள்