கன்னியாகுமரி : ஆகஸ்ட் 29, 2௦23

நற்பணியில் தொடர்ந்து தங்களுக்கான முத்திரையை பதித்து வரும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் முன்னெடுப்பில் இன்னுமொரு படி முன்னே எளிய மக்களும் பயன்பெற இலவச இரவுபாடசாலை மற்றும் இலவச நூலகமும் திறக்கப்பட்டது.

எந்த மேடையில் பேசும்போது தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மாணவர்களே நாளைய தலைவர்கள், பல்துறை வல்லுனர்களாகவும் வருவார்கள் அதற்கு கல்வி மிக அவசியமும் இன்றியமையாதும் ஆகும். எனவே பாடசாலைகளில் கற்கும் கல்வி எந்நாடு சென்றாலும் நம்மை கைவிடாது அதோடு நின்றுவிடாமல் தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து வாரா வாரம் புத்தகங்களை அறிமுகம் செய்வார் அதன் மூலம் வாசகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் (அவ்வாறு அறிமுகம் செய்த புத்தகங்களின் தொகுப்புகள் பற்றிய கட்டுரையின் லிங்க்குகள் கீழே தரப்பட்டுள்ளன)

இப்படி கல்வியின் மகத்துவங்களை பகிர்ந்துவரும் தலைவரின், ரசிகர்களும் தொண்டர்களும் மற்றும் நிர்வாகிகள் அவரைப்போன்றே கல்வியின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக மக்கள் நீதி மய்யம்நெல்லை மண்டல பொறியாளர் அணி நிர்வாகிகள் மற்றும் கிள்ளியூர் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து இரவுபாடசாலை ஒன்றையும் சுமார் 780 புத்தகங்கள் இடம்பெற்றுள்ள நம்மவர் இலவச நூலகமும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திறந்துவைத்தனர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பர் நற்பணி மற்றும் மக்கள் பணி நாயகனான நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் மய்யம் உறவுகளும் அவ்வாறே என்பதற்கு மகத்தான பணிகள் இவையென்பது காண்போருக்கு தெள்ளத்தெளிவாக தெரியும்.

“நெல்லை மண்டல பொறியாளர் அணியும், கிள்ளியூர் மாவட்ட மக்கள் நீதி மய்யமும் இணைந்து 27.08.2023 அன்று நடத்திய சிறப்பு நிகழ்வுகளில், கட்சியின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள் கட்சி மய்யக்கொடி ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் கிள்ளியூர் மக்கள் நீதி மய்யம் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் Dr.வைத்தீஸ்வரன் அவர்கள் 780 புத்தகங்களை கொண்ட நம்மவர் நூலகத்தை திறந்து வைத்தார். மாநில செயலாளர் திரு.சிவ இளங்கோ அவர்கள் இரவு நேர பாடசாலை திறந்து வைத்தார். நெல்லை மண்டல செயலாளர் Dr.D.பிரேம்நாத் அவர்கள் இரவு நேர பாடசாலை வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க முன் வந்த ஆசிரியர்களை கௌரவப்படுத்தினார். தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜான்சன் அவர்கள் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை கௌரவப்படுத்தினார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு: பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு. A.ஜிம்மி பான்சன் மற்றும் கிள்ளியூர் மாவட்ட செயலாளர் திரு.பெறி எவான்சன். மேலும் இந்நிகழ்வில் திரு.ராஜன் (மாநில துணைச் செயலாளர்), திரு.மயில்வாகனன் (மாநில ஒருங்கிணைப்பாளர் தொழில் முனைவோர் அணி), திரு.பிரேம்குமார் பர்னா (நெல்லைமண்டல அமைப்பாளர் விவசாய அணி), திருமதி.செல்வி (நெல்லை மண்டல அமைப்பாளர் மகளிர் அணி), திரு.சரவணகுமார் (சென்னை மண்டல அமைப்பாளர் பொறியாளர் அணி), திரு.அரவிந்த் (காஞ்சி மண்டல அமைப்பாளர் பொறியாளர் அணி), திரு.சண்முகம் (காஞ்சி மண்டல அமைப்பாளர் விவசாய அணி), திரு.சசி (எ) ஜெயபிரகாஷ் (கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்), திரு.ஜோசப் ஹெனி (குளச்சல் ம.நீ.ம மாவட்ட செயலாளர்), திரு.மோகன் (விளவங்கோடு ம.நீ.ம மாவட்ட செயலாளர்), திரு.சபின் (பத்மநாதபுரம் ம.நீ.ம மாவட்ட செயலாளர்), திரு.பிலிப் (பாளையங்கோட்டை ம.நீ.ம மாவட்டச் செயலாளர்), திரு.அய்யா சாமி (சங்கரன்கோவில் ம.நீ.ம மாவட்ட செயலாளர்), திரு.ஜெயக்குமார் (அம்பாசமுத்திரம் ம.நீ.ம மாவட்ட செயலாளர்) அவர்களுடன் மாவட்ட அமைப்பாளர்கள், துணை மாவட்ட செயலாளர்கள்/அமைப்பாளர்கள், ஒன்றிய செயலர்கள்/அமைப்பாளர்கள், நகர செயலாளர்கள்/அமைப்பாளர்கள், வட்டச் செயலாளர்கள், ஆசிரியர்கள், மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam #மய்யநற்பணிகள்