மயிலாடுதுறை : ஜூலை 31, 2௦23

வருகின்ற 2024 ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, மக்கள் நீதி மய்யம் கட்சி அதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேவையான பணிகளை செய்ய மாவட்டம் மற்றும் மண்டலம் தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை பொதுச்செயலாளர், துணைத்தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் முன்னிலையில் நடந்து வருகிறது. தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அதற்கான ஆலோசனைகள் மற்றும் நடக்க வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து அதனை வழிநடத்துமாறு மாநில நிர்வாகிகளுக்கு பணித்திருந்தார். தலைவரின் ஆலோசணையின்படி மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் சனிக்கிழமை (30.07.2023) திருச்சி மண்டலத்தில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் பொதுச்செயலாளர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மண்டல மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் 30.7.2023 அன்று காலை 11 மணியளவில் மயிலாடுதுறை ஹோட்டல் அவின்ஸ்ரீயில் மாவட்டச் செயலாளர் திரு.M.N.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம், துணைத்தலைவர் திரு. தங்கவேலு, மாநிலச் செயலாளர்கள் திரு.சிவ இளங்கோ, திரு.மயில்சாமி, திருமதி.மூகாம்பிகா ரத்னம், திரு. வைத்தீஸ்வரன், திருமதி.ஸ்ரீ ராதாஷா தேவியார், மாநிலத் துணைச் செயலாளர் திரு.பி.எஸ்.ராஜன், திரு.பொன் கஜேந்திரன், திரு.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மாவட்டச் செயலாளர்கள் திருச்சி திரு.சுரேஷ், தஞ்சை திரு.கண்ணன், நாகை திரு.அனாஸ், ஒரத்தநாடு திரு. ரங்கசாமி, திருவிடைமருதூர் திரு. அசோகன், திருவெறும்பூர் திரு.சாகுபர் சாதிக், நற்பணி இயக்க அணி தஞ்சை திரு.தரும சரவணன், கோவை திரு.சத்தியநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் திரு.மனோகரன், சீர்காழி திரு.தியாகராஜன், திரு.கமலிகனேசன், திரு.மூர்த்தி, திரு.அகோரம், திரு.விவேக், திரு.உமாசங்கர், திரு.மணிபாரதி, திரு.மணிசங்கர், திரு.சேகர், திரு.பிரித்திவி திரு.சிவசங்கர் திருமதி.சுஜாதா, பூம்புகார் தொகுதி திரு.பழனிதுரை, திரு.வாசு ஆகியோர் செய்திருந்தனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam #Maiamfor2024