செய்யாறு : ஜூன் 19, 2௦23

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் இசைதலுக்கு உட்பட்டு இணைந்த கரங்களும் தூய்மையும் நேர்மையும் பறைசாற்றும் கொடிகளை தமிழகம் முழுதும் மிக முக்கிய இடங்கள் மட்டுமல்லாது கூடுமானவரை எல்லா தொகுதிகளிலும் மக்கள் புழங்கும் பெரும்பகுதிகளில் பறக்க விடப்பட்ட வேண்டும் என்ற எண்ணத்தினை கருத்திற்கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் கட்சிகொடிகையை நிறுவி வருகிறார்கள். அதன்படி செய்யாறு பகுதியில் நான்கு இடங்களில் இன்று துணைத்தலைவர் மற்றும் மாநில செயலாளர்கள் பங்கு கொள்ள சிறப்பாக உயர பறக்க விடப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக செய்யாறு தொகுதியில் 18.06.2023 அன்று புதிதாக 4 இடங்களில் மய்யக்கொடி ஏற்றப்பட்டது. 1. செய்யாறு ஆரணி கூட்ரோடு சாலையில் துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள் கொடி ஏற்றினார். 2. செய்யாறு புறவழிச் சாலையில் பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் திரு. வைத்தீஸ்வரன் அவர்கள் கொடி ஏற்றினார். 3. செய்யாறு டோல்கேட் பகுதியில் மாநிலச் செயலாளர் திரு. சிவ இளங்கோ அவர்கள் கொடி ஏற்றினார். 4. செய்யாறு ரவுண்டானாவில் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா மற்றும் பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் திரு.வைத்தீஸ்வரன் அவர்கள் கொடி ஏற்றினார்கள். இந்நிகழ்ச்சியினை காஞ்சி மண்டல பொறியாளர் அணி அமைப்பாளர் திரு.E.T.அரவிந்தராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு.சரவணன், பொறியாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் திரு.சரவணன், திரு.ஹரிஹரன், திரு.சரவணன், நகர அமைப்பாளர் திருமதி.கேட்சி சாம்ளா, காஞ்சி மண்டல விவசாய அணி அமைப்பாளர் திரு.S.P.சண்முகம், சமூக ஊடக மாவட்ட அமைப்பாளர் திரு.சுதீர், மாவட்ட செயலாளர்கள் திரு.மூர்த்தி, திரு பாஸ்கர், திரு கோமகன், செய்யாறு தொகுதியின் முன்னாள் வேட்பாளர் திரு.மயில்வாகனன் மற்றும் மய்ய உறவுகள் பலர் கலந்து கொண்டனர்.

#KamalHaasan

#MakkalNeedhiMaiam