சோழிங்கநல்லூர் ஏப்ரல் 22, 2023
“சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் 22.4.2023 அன்று, நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக “நாமே விதை, நாமே விடை” என்னும் முழக்கத்துடன் புதிய உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் 56 பேர் புதிய உறுப்பினர்களாக நம் கட்சியில் இணைந்தனர். தலைமை: மாநில செயலாளர் (கட்டமைப்பு) திரு. சிவ இளங்கோ, மாநில செயலாளர் (தலைமையகம்) திரு. செந்தில் ஆறுமுகம், முன்னிலை: கோவை ஊடக அணி மண்டல அமைப்பாளர் திருமதி. ரம்யா வேணுகோபால், காஞ்சி மண்டல சமூக ஊடக அமைப்பாளர் திரு. மௌலி சோழிங்கநல்லூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. பிரவின் மார்கஸ், பிரச்சார ஒருங்கிணைப்பு: திரு.பிரகாஷ் அரவிந்த் பிரச்சாரத்தில் காஞ்சி மண்டல மாணவர் அணி அமைப்பாளர் திரு. ஷங்கர் ரவி சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி.நான்சி ப்ரிசில்டா அவர்களுடன் மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.” – மக்கள் நீதி மய்யம்\
இயற்கை நமக்கு கிடைத்த பெரும் கொடை. மண், வானம், மழை, வனம் என எண்ணிலடங்கா பல அற்புதங்களை தன்னிடத்தில் கொண்டிருக்கும்.
மனிதர்கள் இயற்கையினிடத்தில் இருந்து எடுத்துக் கொள்வதை கொண்டு தான் தன்னை இயங்கச் செய்து கொள்கிறான். ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிரைச் சார்ந்தது, அது நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ. அதே போன்று ஒன்றுகொன்று பின்னிப்பிணைந்து உள்ளதே அறிவியல் நியதி.
மழை வேண்டுமெனில் மரங்கள் வேண்டும். மண் வளம் பெற்றால் மரம் வளரும் மரங்கள் கூடினால் மழை கிடைக்கும் அதிலிருந்து பூ துளிர்க்கும் காயாகும் அதுவே கனியாக உருமாறும் தலைமுறைகள் உண்டுகளிக்கும், பின் மீண்டும் விதையாக விழும், மீண்டும் துளிர்த்து செடியாகும் அதுவே வளர்ந்து மரமாகும். ஆக, இந்த சுழற்சியை வைத்தும் இன்றைக்கு ஒருவர் விதைத்து நாளை மரமாகி அதன் பயனை விதைத்தவர் பெற்றிட இயலாமல் போனாலும் அவருக்கடுத்த தலைமுறைகள் மரத்தினால் கிடைக்கபெறும் பயன்களை வைத்து ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக இதனை ஒட்டி தான் வெகு அர்த்தமுள்ள ஓர் வசனத்தை தனது திரைப்படமொன்றில் காட்சிப்படுத்தியிருந்தார். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெறும் அந்த உரையாடல் பல ஆயிரம் மடங்கு அர்த்தம் பொதிந்தது எத்தனை ஆண்டுகள் கடந்தும் நிற்கிறது என்றால் அதன் வீரியம் அப்படி.
இன்றைக்கு விதைக்கப்படுவது நாளை பெரும் வனமாகும். ஒரு சிறு குழுவை திரட்டி துவங்கியிருக்கும் இந்த விதை பரப்புதல் நிகழ்வு ஓர் நாள் மிகப்பெரும் நல்வனமாகும் நம் மக்கள் வாழ்வும் வளமாகும்.
நம்மவர் தலைவர் கமல்ஹாசன் தனது அன்பின் விதைகளை தாம் காண்போரிடம் தூவிச் செல்கிறார் அப்படி அன்பினைப் பெற்றுக் கொண்ட மக்கள் நீதி மய்யம் உறவுகள் நாமே விதை நாமே விடை எனும் இந்நிகழ்வு மூலமாக பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளலாம் “விதை நான் போட்டது”.