சென்னை : மே – 1, 2023

பொதுவுடமைவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ம.சிங்காரவேலர் தலைமையில் இந்தியாவில் சென்னை மாகாணத்தில் 1923 ஆம் ஆண்டில் மெரினா கடற்கரை மற்றும் எம்பிஎஸ் வேலாயுதம் மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோர் தலைமையில் திருவான்மியூர் பகுதியில் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. ஆகவே நடப்பாண்டான 2023 இன்றைய நாள் 1௦௦ ஆவது மே தினமாகும்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தினசரி 12 முதல் 18 மணி நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். இதனை எதிர்த்து பல நாடுகளில் குரல் எழுப்பபட்டது குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட சாசன இயக்கம் (Chartists) இந்த இயக்கம் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்ந்து நடத்தப்பட்டு 6 முக்கிய கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அதன் முக்கிய அம்சமாக 1௦ மணிநேரம் பணிபுரிய வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன் வைத்தது.

இதற்கடுத்து களில் பிரான்ஸ் நாட்டில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 15 மணிநேரம் உழைக்க வேண்டியிருந்தது. இதனை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடத்தினர். பிற்பாடு 1834 இல் ஜனநாயகம் இல்லை மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் இவையனைத்தும் பெரும் தோல்வியில் முடிந்தன.

1856 இல் ஆஸ்திரேலிய மெல்போர்ன் நகரில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் முதன் முறையாக 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றனர். இப்போராட்டமே முதல் மைல்கல்லாக அமைந்தது எனலாம்.

ரஷ்ய தொழிலாளர்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். 1895 – 1899 இடைப்பட்ட காலங்களில் பல வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. மே தினத்திற்காக லெனின் ஏப்ரல் மாதத்தில் எழுதிய சிறு பிரசுரத்தின் வாயிலாக தொழிலாளிகளின் துன்பங்களையும் அல்லல்களையும் விரிவாக எழுதியதன் காரணமாக அவர்களின் பொருளாதார போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேரம் பணி குறித்த போராட்டம் பிற்பாடு உண்டான ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக பல முறை எழுச்சி கண்டுள்ளது. இந்தியாவில் 1௦௦ வருடத்திற்கு முன்னதாக துவங்கிய மே தின கொண்டாட்டம் இன்று வரை தொடர்கிறது.

2023 மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் ஏன் என்றால் உழைப்பதன் ருசியை அவர் என்றும் அறிவார் உழைப்பின் பலனாக கிடைக்கும் ஊதியத்தை அதற்கு தக்க வரிகளை இம்மியும் குறையாமல் அரசுக்கு செலுத்திவிடுவதில் என்றும் தவறியதில்லை.

‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்’ என்றார் பாவேந்தர். நமது அன்றாட வாழ்க்கைக்குப் பின்னால் நாமறியாத பல்லாயிரம் பாட்டாளிக் கரங்கள் உள்ளன என்பதை உணர்வதும், அவர்களின் உழைப்பைப் போற்றுவதும், உரிமைகளை உறுதி செய்வதும் நம்முடைய பொறுப்பு. உழைப்பால்தான் இந்த உலகம் உயர்ந்திருக்கிறது. உழைப்பாளிகளும் உயர்த்தப்பட வேண்டும். தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது இதயப்பூர்வமான மே தின வாழ்த்துகள்.திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்