மே 08, 2023

கோடி கோடியாக பணமும் பொருளும் கொட்டிக் கிடந்தாலும் கல்வி என ஒன்று இருந்தால் மட்டுமே அவர்க்கு சிறப்பு. வீட்டிற்கு வரும் எவரும் அல்லது எதிர்படும் யாரும் என்ன படிக்கிறாய் அல்லது என்ன படித்திருக்கிறாய் என்றே கேட்பார்கள். ஆணிடம் சம்பளமும் பெண்ணிடம் வயதையும் கேட்கக் கூடாது என்பர் ஆனால் படித்ததை/படிப்பதை பற்றி யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம்.

பல திரைப்படங்களில் அமைக்கப்பட்ட காட்சிகள் பலவும் கல்வியறிவின் மகத்துவத்தை மேன்மையை எடுத்துக் கூறுவதாகவே இருக்கும். இதில் குறிப்பிட்டு சொல்வதென்றால் கல்வி பற்றி பேசிய சில திரைப்படங்களுக்கு வரிவிலக்குகள் கூட கிடைக்கப்பெற்றன.

மேல்தட்டு மக்களின் பிள்ளைகள் இருக்க புழங்கிட தனி அறைகள் வசதியான சூழல்கள், உயர்ந்த தரமுடைய பள்ளிகளில் கல்வி இப்படி பல வசதிகள் இருந்தும் சிலர் படிப்பதில் சுணக்கம் காட்டுவார்கள். ஆனால் கூலிவேலைகள், அடிமட்ட வாழ்வியல் சூழல்கள், வேளாண்மை சார்ந்த தொழிலாளிகள் என வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள சூழலில் படிக்கும் பிள்ளைகள் பலர் தங்களின் பொருளாதார இயலாமையை பொருட்படுத்தாது படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு தங்களுக்கு முந்தைய தலைமுறைகள் கல்வி கற்காமல் பின்தங்கி இருந்ததை களைந்து விட எத்தனித்து முயன்று கற்றலில் சிறந்து விளங்கி இது போல் பல சாதனைகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 63 வருடங்களாக தமிழ்த் திரையுலகில் அசைக்க முடியாத திரைக்கலைஞராக மட்டுமன்றி பல வகைகளில் நிறைய சிறப்பான கலைகளில் முத்தாய்ப்பாக விளங்கிவரும் திரு கமல்ஹாசன் அவர்களின் கல்வி எட்டாவது வரை மட்டுமே என்றால் எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் பல சிகரங்களை அவர் தொட்டிருக்கிறார், நடிப்பில், தயாரிப்பில், கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் இன்னும் சொல்லபோனால் அயல்நாடுகளில் கோலோச்சிக்கொண்டிருந்த தொழில்நுட்பத்தின் பரிமாணங்களை தனது திரைப்படங்களில் புகுத்தி உலகளாவிய கலைஞர்களின் பார்வையை மற்றும் திரையுலகின் பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்ப வைத்ததில் அவருக்கு நிகர் அவரே. இவையனைத்தும் தனது ஈடுபாட்டினால் மட்டுமே அணுகினார் அதனை கற்றுக் கொண்டார். இதில் அனுபவ அறிவு மேலோங்கி நிற்கிறது. பள்ளிப்படிப்புடன் நின்றுவிட்ட தான் ஒருவேளை சினிமா நடிகனாக வரவில்லை என்றால் எங்களின் குடும்பத்தில் பலர் வழக்கறிஞர் அப்படியாக கூட நான் எனது தொழிலை தேர்வு செய்து சென்றிருக்கலாம் எனவும் பல மேடைகளில் பேசியிருக்கிறார். மேலும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பெருமையும் உண்டு மட்டுமல்லாது மாணவர்களுடன் உரையாடுவது குறித்து பெரும் சந்தோசம் கொள்வேன் என்றும் சொல்பவர் பல கல்லூரிகளில் மாணவர்களிடையே உரையாடி அறிவார்ந்த கருத்துக்களை விதைத்துள்ளார். எப்போது எங்கே சென்றாலும் கல்வியின் மகத்துவத்தை விளக்கிட மறந்ததே இல்லை. மாணவர்களின் தேடுதல் முதல் கல்வி பின் நல்ல அரசியல் அது வசதி கொள்ளாமல் போனால் அவரவர் விரும்பிய துறைகளில் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு அதில் முன்னேற்றம் காண்பது அவசியம் என்றும் சொல்லியது மிகச்சிறப்பு.

கல்வி என்பது அசைக்க முடியாத மற்றும் களவாட முடியாத மிகப்பெரும் சொத்து.

ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண். கூலி தொழிலாளி மகள் நந்தினிக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு! நம்மவர் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் அறிக்கை. – மக்கள் நீதி மய்யம்