கோயமுத்தூர் : ஜூன் 26, 2௦23
கோவை வடகிழக்கு மாவட்டம், சூலூர் தொகுதி சார்பாக 25-06-2023 காலை இருகூரில் உள்ள 7 மதுக்கடைகள் மாற்றக் கோரி மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்களின் தலைமையில் ஒன்றிய செயலாளர் தனபால் அவரின் ஏற்பாட்டில் ஆதி கணேசன், மயில் கணேஷ் , ஆனந்தகுமார், பூபதி, பழனிச்சாமி சுகுமார், குமரவேல், பாலு அவர்களின் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் மய்யக் கொடியேற்றி, கையெழுத்து இயக்கத்தை தொடக்கிவைத்தார். நிகழ்வில் ராஜசேகரன், தர்மலிங்கம், சரவணன், தங்கராஜ், கிருஷ்ணன், செல்வம், செல்வம் ஆறுச்சாமி, மஹாலக்ஷ்மி, முருகராஜ், மணிமொழி, சௌந்தர்ராஜன், ஜெய்கணேஷ், சத்யநாராயணன், சிராஜுதீன், தாஜுதீன், பூபதி, சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.