தருமபுரி : ஜூன் 3௦, 2௦23

மக்கள் நீதி மய்யம் தருமபுரி மேற்கு மாவட்டம் சார்பாக தருமபுரியில் 29-06-2023 அன்று துணைத்தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அவர்கள் தலைமையில், பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு. வைத்தீஸ்வரன் அவர்களின் முன்னிலையில், இளைஞரணி மாநில செயலாளர் திரு. கவிஞர் சிநேகன் அவர்கள் எழுச்சியுரையாற்ற பாராளுமன்றத் தேர்தலை நோக்கிய பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.ஜெய வெங்கடேசன் அவர்களின் தலைமையில் தொழிலாளர்அணி மாவட்ட அமைப்பாளர் & NTSP மாநில பொது செயலாளர் திரு.V.ரவிச்சந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் திரு. G.சித்தார்த், தொழில் முனைவோர் நல அணி மாவட்ட அமைப்பாளர் திரு.கமலக்கண்ணன், தர்மபுரி ஒன்றிய செயலாளர் திரு.R.செந்தில்குமார் உள்ளிட்ட தர்மபுரி மேற்கு மாவட்ட மய்ய நிர்வாகிகள் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.  பொதுக்கூட்டத்தில் 10ம்வகுப்பு, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு “நம்மவர் கல்வி விருதுகள்” மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மகளிர் மன்றங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் தருமபுரி மேற்கு மாவட்டம் நல்லாம்பள்ளி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு.சந்தோஷ்குமார் தலைமையில் இளைஞர்கள் பலர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.  #KamalHaasan#MaiamFor2024#MakkalNeedhiMaiam