செய்யார் : ஜூலை 18, 2023

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆசியுடன் காஞ்சி மண்டல பொறியாளர் அணியின் சார்பாக மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் மாதம் 18, 2023 அன்று செய்யாறில் துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள் மற்றும் பொறியாளர் அணியின் மாநில செயலாளர் திரு.S.R.வைத்தீஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்களின் வாழ்த்துரையில், காஞ்சி மண்டல பொறியாளர் அணியின் அமைப்பாளர் திரு.E.T.அரவிந்தராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக சிறப்பு விருந்தினர்களாக மாநில செயலாளர் கட்டமைப்பு திரு.சிவ இளங்கோ, அவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் தொழில் முனைவோர் அணி திரு. மயில்வாகனன் அவர்கள் காஞ்சி மண்டல விவசாய அணி அமைப்பாளர் திரு.S.P.சண்முகம் அவர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளை தேர்வு செய்து கடந்த ஜூலை 16 ஆம் தேதியன்று நடந்து முடிந்த இறுதிப் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த BRCC பிரதர்ஸ் அணியினர் முதல் பரிசை தட்டிச் சென்றனர், அவர்களுக்கு 5௦ ஆயிரம் ரொக்கம், கோப்பை மற்றும் சான்றிதழும், இரண்டாம் இடம் பிடித்த செய்யாரை சேர்ந்த WORLD STAR அணிக்கு 25 ஆயிரம் ரொக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் இடம் மற்றும் நான்காம் இடம் பெற்ற அணிகளுக்கு முறையே 10 ஆயிரம் ரொக்கம் சான்றிதழ் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

சிறந்த முறையில் இந்த கிரிகெட் போட்டியினை நடத்திட பெருமுயற்சி செய்து அதனை வெற்றிகரமாக செய்து முடித்த காஞ்சி மண்டல பொறியாளர் அணி அமைப்பாளர் மற்றும் அவருக்கு உடனிருந்து உதவிய அனைத்து மய்ய நிர்வாகிகளுக்கும் மக்கள் நீதி மய்யத்தின் உறவுகளாகிய மய்யத்தமிழர்கள்.com நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்ட கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் துவக்க விழா பற்றிய தொகுப்புக் கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது :