சென்னை : ஜூலை 1௦, 2௦23
சில நாட்களுக்கு முன்னர் கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுனரான இளம்பெண் செல்வி ஷர்மிளா செய்து கொண்டிருந்த ஓட்டுனர் பணியில் இருந்து பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் அவரை விடுவித்ததால் வருத்தத்தில் இருந்ததை கேட்டு அறிந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் அக்குடும்பத்தினரை நேரில் அழைத்து, இது குறித்து என்ன நடந்தது என ஓர் தாயுள்ளத்துடன் கேட்டறிந்து ஓர் தந்தை ஸ்தானத்தில் இருந்து இது போன்ற சமையங்களில் நமக்குள் இருக்கும் மன தைரியத்தினை விட்டு விடக்கூடாது என்றும் ஒரு பெண் இது போன்று பல சாதனைகளை செய்யத் துவங்கும்போது இதனைப் போன்றும் அல்லது இதனை விட இன்னும் கடுமையாக பல இடர்கள் நிச்சயம் ஏற்படும், அவற்றை எதையும் கருத்தில் கொள்ளாமல் நமது இலக்கினை நோக்கி நம்மை செலுத்த வேண்டும். கவனத்தை எதிலும் எங்கும் சிதறவிடாமல் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று தன்னம்பிக்கை தந்து உற்சாகப்படுத்தி பேசியதோடு நின்றுவிடாமல் அப்பெண்ணை சுயதொழில் புரியும் ஓர் குறு நிறுவன உரிமையாளராக மாற்றும் பொருட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் கார் ஒன்றினை பரிசளிப்பதாக உறுதியளித்து, கார் வாங்கிடத் தேவையான தொகையினை கார் டீலர்களிடம் விசாரித்து அதன் விளைவிபரங்கள் கொண்ட கொட்டேஷன் பெற்றுத் தரச்சொல்லியும் கார் புக் செய்திட அதற்கான முன்பதிவு தொகையாக ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையை கமல் பண்பாட்டு மையம் சார்பில் அளித்தார்.
இதனிடையே இந்த செய்தியை முழுதும் தெரிந்து கொள்ளாமல் சமூக வலைதளங்களில் இயங்கும் அதிகாரப்பூர்வ நபர்கள் அல்லாத யாரோ சில விஷமிகள் கொடுக்கப்பட்ட மொத்தத் தொகையே ரூ 3 லட்சம் தான் அதை மட்டுமே கொடுத்துவிட்டு அப்பெண்ணிற்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்தார் எனவும் இதனால் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நகர்வதால் இதனால் அரசியல் ஆதாயம் அடைந்து கொள்ளவே இப்படி ஓர் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் என்று கொஞ்சமும் உண்மையற்ற புரளியை வெகுவேகமாக சமூக ஊடகமெங்கிலும் பரவச் செய்து விட்டனர் அந்த விஷமிகள். அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்க்காமல் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை கேட்டு அறிந்து உறுதி செய்துகொள்ளாமல் அளித்த தொகையை முன்பணமாக கருதாமல் மொத்தத் தொகையே அது தான் அதைக் கொடுத்துவிட்டு கார் தந்ததாக வெறும் விளம்பரம் செய்கிறார் என்றும் பல சமூக ஊடகங்களில் பல புரளிகள் நாலா பக்கமும் வேகமாக பரவியது அனைவரும் அறிந்ததே.
திரு.கமல்ஹாசன் அவர்கள் ஓர் விஷயத்தை கையில் எடுக்கிறார் என்றால் அதனால் எத்தகையான சிக்கல்கள் வந்தாலும் அவற்றை சற்றும் பொருட்படுத்தாமல் முடிக்க வேண்டிய பணிகளை முடித்துத் தருவார். அவரைப் பற்றி அரைகுறையாக அறிந்துகொண்டு எதையும் ஆராயாமல் வன்மம் கொண்ட பேச்சுக்கள் பேசியவர்களின் முகத்தில் கரியை பூசிவிடுவார். இதற்கிடையில் அவரிடமிருந்து வெளிவருவது ஓர் மெல்லிய புன்னகை மட்டுமே அந்த மெல்லிய புன்னகைக்கு பின்னே நீங்கள் என்னவேண்டுமானாலும் பிதற்றிக் கொள்ளுங்கள் நான் சொன்னதை செய்பவன் அதற்காக என்ன விலை கொடுக்க வேண்டும் என்றாலும் அதற்காக அஞ்சமாட்டேன் பின்வாங்கவும் மாட்டேன் என்பதாக அப்பணியை செவ்வனே செய்து முடிப்பார்.
அதே போன்று தான் கோவை செல்வி ஷர்மிளாவிற்கு கார் பரிசளிக்காமல் வெறும் விளம்பரம் மட்டும் செய்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார் என்ற புரளியை சுக்கு நூறாக்கி, முன்பணமாக கொடுத்தது போக மீதமுள்ள தொகையை சம்பந்தபட்ட கார் ஷோரூமில் செலுத்தி மஹிந்திரா கார் தயாரிப்பு நிறுவனத்தின் புத்தம் புதிய மோரோசோ கார் ஒன்றினை சொன்னதை சொல்லியபடி தனது தலைமையில் இயங்கும் கமல் பண்பாட்டு மையம் சார்பில் தனது சொந்த செலவில் பரிசளித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள்.
சொல்லும் செயலும் எப்போதும் ஒன்றுதான் ; சொன்னதை செய்த மய்யத் தலைவர்