ஆகஸ்ட் 15, 2௦23

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் தேசியக்கொடி ஏற்றி வைத்தும் தேசிய கீதம் ஒலிக்கச்செய்தும் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்தும் மரியாதை அளிக்கப்பட்டது.

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் சுதந்திர தின விழா நடைபெற்றது அதன் தொகுப்பினை நீங்கள் கீழே காணலாம்.

மக்கள் நீதி மய்யம், தலைமை அலுவலகம் – சென்னை :

நமது தேசத்தின் 77 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று (15.08.2023) நமது கட்சி அலுவலகத்தில் காலை 10 மணியளவில், துணைத்தலைவர் திரு. மௌரியா அவர்களின் தலைமையில், பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள் முன்னிலையில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகை தந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக நிகழ்ந்த இவ்விழாவில் நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன் மாநில செயலாளர்கள் திரு செந்தில் ஆறுமுகம், திரு சிவ இளங்கோ, திரு முரளி அப்பாஸ், திரு ராகேஷ் ராஜசேகரன், திரு பிரதீப்குமார், திருமதி ஸ்னேஹா மோகன்தாஸ், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. மயில்வாகனன், திரு. ஜான்சன் மாநில துணைச் செயலாளர்கள் திரு. P.S ராஜன், திரு. கபிலரசன், மாவட்ட செயலாளார்கள் திரு. ஓம் பிரகாஷ், திரு.வசந்த் சிங், திரு.மாறன், திரு.சண்முக சுந்தரம், திரு.தேசிங்கு ராஜன், திரு.உதய சந்திரன், திரு.சக்தி, திரு.ஸ்டான்லி, திரு உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கோவை தெற்கு சிங்காநல்லூர் இருகூர் ஆகிய பகுதிகள் :

77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கோவை தெற்கு, சிங்காநல்லூர், இருகூர் பகுதிகளில் மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் முன்னிலையில், துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார். சூலூர் ஊராட்சி ஒன்றியம் நீலாம்பூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் நமது கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலாளர்கள் பிரபு, மனோரம்யன், நற்பணி இயக்க மண்டல அமைப்பாளர் சித்திக், மத்திய மாவட்ட இணைச் செயலாளர்கள் சத்திய நாராயணன், தனவேந்திரன், நகர செயலாளர்கள் தாஜுதீன், சிராஜுதீன்,மாரியப்பன் மற்றும் பூபதி, சக்கரவர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர் சாந்தி, மணி, புகழேந்தி, கண்ணன், கீர்த்தி, வடவள்ளி சாந்தி, சசிகலா, ராஜ்கமல், சித்தாபுதூர் சாந்தி, ராஜசேகர், சாய்பாபா காலனி சாந்தி, வெங்கட், சுப்பிரமணி, மோகன், சண்முகம், ரஞ்சித், சரவணன், கணேஷ், சிவக்குமார். சிங்காநல்லூர் தொகுதி மாவட்டத் துணைச் செயலாளர் மயில் கணேஷ், முருகராஜ், ஜெய்கணேஷ், சௌந்தர்ராஜன், சண்முகம், சுகுமார், ஜூஜி மகேந்திரன், பார்த்தசாரதி, பிரபாகரன், பேச்சிமுத்து, கௌரி, விபின் ஷூர் தன்ராஜ், அருண். சூலூர் தொகுதி ஒன்றிய செயலாளர்கள் ஆதி கணேசன், தனபால் மற்றும் பூபதி, இருகூர் சுகுமார், ராஜசேகரன், தர்மலிங்கம், சதீஷ், பேச்சிமுத்து, தங்கராஜ், கிருஷ்ணன், மருதப்பன், மரகதம், கமல் செல்வம், பிரேம், தானு, தனசேகர், ஸ்ருதி, ஆறுச்சாமி, பட்டணம் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

#IndependenceDay#ProudtobeIndian#KamalHaasan#MakkalNeedhiMaiam#IndependenceDay2023