செப்டெம்பர் : ௦5, 2௦23

ஒரு மனிதன் தனது தார்மீக உரிமையாக பேச்சு மற்றும் வாழ்வியல் சுதந்திரம் இருந்திட வேண்டும் என்று விரும்புகிறான் எனில் அதற்கு அடித்தளம் இடுவது கல்வி தான் என்பது தவிர்க்க அல்லது மறைக்க முடியாத உண்மை.

கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். இந்தக் கூற்று முற்றிலும் மறுக்க முடியாத உண்மை தானே.

பண்டைய காலம் தொட்டே ஆசிரியர்கள் என்றால் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. கல்வி கற்ற மாணவர்கள் தனது ஆசிரியரை எங்கே எப்போது காண நேர்ந்தாலும் அவர்களை வணங்கி ஆசி பெற்றுச் செல்வார்கள், அவர்களை தங்களது மூத்தோர் போல எண்ணுவதும் உண்டு.

அப்படி பல சிறப்புகள் வாய்ந்தது ஆசிரியப்பணி. அப்பணியை பொருளீட்டும் வேலையாக மட்டுமே கருதாமல் மாணவர்களுக்கு கல்வியும், அறமும், நெறியும் ஒழுக்கமும் வாழ்வியல் முறைகளை போதிக்கும் சேவையாக கருதுவர் ஆசிரியப் பெருமக்கள்.

இத்தகைய சிறப்பு பெற்ற ஆசிரியர்கள் தினம் என்பது நமது சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிய காலம்சென்ற மாண்புமிகு திரு சர்வப்பள்ளி இராதகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாணவர்கள் ஆசிரியர்களின் தந்தை என போற்றப்படும் திரு ராதாகிருஷ்ணன் அவர்களையும் தங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி போதித்த ஆசிரியர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து மானசீகமாக நன்றி சொல்வதும் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.

தமிழ்த்திரையுலகில் சிறந்த கலைஞராக விளங்கி வருபவரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் தான் கல்வியில் தேர்ச்சி பெறாமல் போனாலும் (இப்படி குறிப்பிட அவர் எங்கும் எந்த மேடையிலும் தயங்கியதில்லை அதே போல் பிறர் போல கல்வியில் சிறந்து விளங்கியதாக பொய்யும் பேசியதில்லை தான் பெரும் ஊதியத்தில் எப்படி எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் அரசுக்கு செலுத்தும் வருமான வரி கணக்கு வழக்குகள் போல தெளிந்த நீரோடையாக இன்றும் திகழ்கிறார்) தனக்கு நாடக மேடைகளில் மற்றும் வெள்ளித்திரையில் தன் திறமைகளை வெளிக்கொணர்ந்து கற்றுத் தந்த ஆசான்களை என்றும் நினைவு கூர்வார். கல்வி போதிப்பவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் எந்தக் கலைகளையும் கற்பிக்கும் அனைவரும் ஆசிரியர்களே என்பது அவருடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.

ஆசிரியர்கள் தினமான இன்று திரு கமல்ஹாசன் அவர்கள் ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துச்செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு. தமிழ்ச் சமூகம் எழுந்து நின்றதிலும் எழுச்சி பெற்றதிலும் ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகம். நம் ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன். அவர்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துகிறேன். திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்