செப்டெம்பர் : ௦5, 2௦23

இந்தியாவை அடிமைபடுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ்காரர்கள் ஆங்கிலேயரை முழு வேகத்துடன் எதிர்த்தவர் எதற்கும் அஞ்சாமல் துணிந்து அவர்களுக்கு எதிராக சுதேசி எனும் கப்பல் போக்குவரத்தை நடத்தியவர். இவருடைய வீர தீரம் கண்டு அச்சமுற்ற பரங்கியர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள் அங்கே அளிக்கப்பட்ட கடுமையான தண்டனைகளில் செக்கிழுத்ததும் ஒன்று. அதனை குறித்தே திரு. வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு இரண்டு பெயர்கள் நிலைத்துவிட்டது. அவை முறையே செக்கிழுத்த செம்மல் என்றும் கப்பலோட்டிய தமிழர் என்பதும் ஆகும். அவரது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

தாய் நாட்டையும் தாய்த் தமிழையும் தன்னிரு கண்களாகக் கொண்டவர் வ.உ.சிதம்பரனார். ஆதிக்கத்தைத் துணிச்சலுடன் எதிர்த்து நின்ற கப்பலோட்டிய தமிழரின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம். – திரு.கமல்ஹாசன்