ஆகஸ்ட் 24, 2023

செஸ் உலககோப்பை இறுதிபோட்டியில் உலகச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா செஸ் வீரர்கள் போட்டியிட்டார்கள் நேற்று நடந்த இறுதிப்போட்டிக்கான ஆட்டத்தில் இருதரப்பிற்கும் பொதுவாக டிரா ஆனது. அதனைத் தொடர்ந்த இன்றைய இறுதிபோட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடிய பிரக்ஞானந்தா எதிர்த்து போட்டியிட்ட கார்ல்சனுடன் காய்களை நகர்த்திவந்தவர் எதிர்பாராத விதமாக போட்டியில் தோல்வியைத் தழுவினார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரரும், 5 முறை உலகச் சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சன் – ஐ எதிர்கொண்டு இந்தியாவிற்காகக் களமிறங்கிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிவரை தீரத்துடன் போராடினார். வெற்றிவாய்ப்பினை நூலிழையில் தவறவிட்டாலும் பல கோடி மனங்களை ஈர்த்த பிரக்ஞானந்தா நம் பெருமிதம். அவருக்கு என் வாழ்த்துகள். – திரு.கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்

#FIDEWorldCupFinal

#Praggnanandhaa

#ChessWorldCup