திருச்சி : ஆகஸ்ட் ௦7, 2௦23
மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை நிறுத்தக் கோரியும், திறனற்ற பிஜேபி அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரியும், மெத்தனப்போக்கு காட்டும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியால் நேற்று ௦6.௦8.2023 நடத்தப்பட்டது.
அதன்படி திருச்சி மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
06.08 2023 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் அவர்களின் ஆணைக்கிணங்க மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த தவறிய மணிப்பூர் மாநில பிஜேபி அரசு மற்றும் மத்திய பிஜேபி அரசுகளை கண்டித்து திருச்சி மண்டலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகை மாவட்ட செயலாளர் திரு.மு.செய்யது அனஸ் ஏற்பாட்டில் மாநில பொறியாளர் அணி செயலாளர் திரு. வைத்தீஸ்வரன் அவர்கள் தலைமையில் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருச்சி மண்டல சமூக ஊடக அமைப்பாளர் திரு.செந்தில்குமார், நற்பணி இயக்க திருச்சி மண்டல அமைப்பாளர் திரு.ரிபாயுதின் மற்றும் முன்னிலை வகித்தவர்கள் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் திரு.ராஜகோபால், திருவெறும்பூர் மாவட்ட செயலாளர் திரு.ஜகபர் சாதிக், ஒரத்தநாடு மாவட்ட செயலாளர் திரு.ரங்கசாமி, திருவிடைமருதூர் திரு.அசோகன், மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக திரு.மனோகரன், திரு.தியாகராஜன், திருச்சி மாவட்டம் சார்பாக திரு.பாரூக் திருவாரூர் மாவட்ட சார்பாக திரு. செந்தில்குமார், கீழ்வேளூர் நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் திரு. கண்ணன் மற்றும் நாகை மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் திரு.ஜி.பிரான்சிஸ் சிக்கல், திரு.எம்.இளங்கோ, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு.ராம் பிரசாந்த், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி.அனுராதா, தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு.செய்யது சாஹிப், நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் திரு.ஓம் பிரகாஷ், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் திரு.இளந்தமிழன், நாகூர் நகர செயலாளர் திரு.அபுல் ஹசன் மற்றும் நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
#மணிப்பூர்காப்போம்_மனிதம்காப்போம்