அக்டோபர் 30, 2023

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நம்மவர் தொழிற்சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பொதுக்குழு & செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்.

தொழிற்சங்க அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக மதுரை திரு.சொக்கர் அவர்கள் பொறுப்பேற்பார் என தலைவரால் அறிவிக்கப்பட்டது. மேலும் தொழிற்சங்க பேரவையின் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு அதன்படியே தவறாமல் மிகசரியான முறையில் அவற்றை செய்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் இப்பொதுக்குழு கூட்டத்தில் மேலும் இரண்டு புதிய தொழிற்சங்கள் ராஜலட்சுமி அம்மையார் மய்யம் மகளிர் தொழிற்சங்கமும், திருப்பூர் பனியன் தொழிற்சங்கமும் ந.தொ.ச.பே யில் தங்களை இணைத்துக் கொண்டன.

இன்று தலைமை நிலையத்தில் நடைபெற்ற நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களால், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளராக மதுரை திரு. R.சொக்கர் அவர்கள் அறிவிக்கப்பட்டார்! பொதுக்குழுக் கூட்டத்தில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை முன்னெடுத்துச் செல்லவேண்டிய செயல்திட்டங்களை எடுத்துரைத்த நமது தலைவர் அவர்கள்“ நமது தொழிற்சங்கங்கள் தனித்துவம்மிக்கதாக செயல்படவேண்டும்” என்று வலியுறுத்தினார். பொதுக்குழு கூட்டத்தில், ராஜலட்சுமி அம்மையார் மய்யம் மகளிர் தொழிற்சங்கமும், மய்யம் திருப்பூர் பனியன் தொழிற்சங்கமும், நம்மவர் தொழிற்சங்கப்பேரவையில் இணைந்தன!  பொதுக்குழுக் கூட்டத்திற்கு கட்சியின் துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் வரவேற்புரையாற்றினார். பேரவையின் பொதுச் செயலாளர் திரு.V.ரவிச்சந்திரன் அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்வில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம், தலைமை நிலைய மாநிலச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம், பேரவையின் மாநில பொருளாளர் திருமதி. M.பானுமதி, துணைத் தலைவர்கள் திரு. K.மாடசாமி, திரு. N.K.ராஜன், திரு. P.குணசேகரன், திரு. A.மெல்கியோ சுதன், திரு. S.சுரேஷ், திரு. M.ஆனந், திரு.கோ.ரவிச்சந்திரன், திருமதி. E.சங்கீதா, கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேரவையின் நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.

https://x.com/maiamofficial/status/1719012471997100453?s=20

#KamalHaasan #MakkalNeedhiMaiam