நவம்பர் 14, 2023
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பொறுபேற்றுக் கொண்ட திரு.ஜவாஹர்லால் நேரு அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல வகையிலும் பல துறைகளும் முன்னேற்றம் அடைந்தன. பல அரசு நிறுவனங்களும் துவக்கப்பட்டு நிர்வகிக்கபட்டன. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா 1947 இல் சுதந்திரம் பெற்றதும் பூஜ்ஜியத்திலிருந்து துவங்கியது மக்களுக்கான ஜனநாயக ஆட்சி. தற்போதைய வளர்ந்த இந்தியாவின் முந்தைய கட்டமைப்பை திறம்பட உருவாக்கித் தந்தவர். உடனிருந்த பல வல்லுனர்களின் உதவியுடன் இவற்றை செய்து முடித்தார். அவருடைய 134 ஆவது பிறந்தநாள் இன்று இந்தியா முழுதும் கொண்டாடப்படுகிறது இதையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது வாழ்த்தை வெளியிட்டுள்ளார்.
நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள். பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளின் நிலையை உள்ளும் புறமும் தெளிவுற அறிந்து அவர்களை உயர்த்த, தன் ஆற்றலைப் பயன்படுத்திய பெருந்தகை நேரு பிறந்த நாளில் அவர் செய்த சீர்திருத்தங்களையும் கொண்டுவந்த மறுமலர்ச்சிகளையும் மனம் கொள்வோம். – திரு.கமல்ஹாசன்
https://x.com/ikamalhaasan/status/1724256843516751965?s=20
https://x.com/PTTVOnlineNews/status/1724276223990276246?s=20
https://x.com/Maiatamizhargal/status/1724356003154575817?s=20
https://x.com/dinakarannews/status/1724286538853527763?s=48&t=K7WyKhHLaVYo3h0E7a37eA