சென்னை : நவம்பர் ௦8, 2023

மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக சென்னை நீலாங்கரை R.K கன்வென்ஷன் அரங்கில் நவம்பர் 07 ஆம் தேதியன்று (அதாவது நேற்று) நடைபெற்றது. பெரும்திரளான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு மேடையில் இருந்த தலைவருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் இரு கைகள் கூப்பி வரவேற்று வாழ்த்தியமைக்கு நன்றி தெரிவித்தார் நம்மவர். மேலும் அவரது பிறந்தாநாள் முன்னிட்டு அவரது ரசிகர்கள் & தொண்டர்கள் உட்பட திரையுலகில், அரசியல் கட்சிகளின் , தலைவர்கள், அண்டை மாநில முதல்வர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர். அவற்றை கண்டு கேட்டு படித்து மகிழ்வுற்ற தலைவர் அவர்கள் தனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

எத்தனையெத்தனை இதயங்கள்… அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்.திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://x.com/ikamalhaasan/status/1722135379917111364?s=20