நவம்பர் 18, 2023
தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கிய பலரில் மிக முக்கியமான இடம் திரு.தி.ஜானகிராமன் அவர்களுக்கு உண்டு. திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி அருகில் தேவக்குடி எனும் ஊரில் 28.02.1921 அன்று பிறந்தவர். பள்ளி, கல்லூரி படிப்புகள் முடிந்து ஆசிரியராக பணியாற்றிய அனுபவமும் உண்டு. பிற்பாடு சென்னை வானொலி நிலையத்தில், தில்லி வானொலி நிலையத்தில் தமிழ் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக பணியாற்றினார். இவர் வானொலியில் பணியாற்றிய போது ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
தமிழில் மிகச்சிறந்த நூல்களை எழுதி வெளியிடப்பட்டது. நாவல்கள், குறு நாவல்கள், சிறுகதைகள், பயண நூல்கள், கட்டுரை மற்றும் நாடகங்களும் எழுதியுள்ளார். தி.ஜானகிராமன் அவர்களின் மிகப் பிரபலமான நாவல் மோகமுள் ஆகும். திரைப்படமாக உருவாக்கப்பட்டு வெளியானது.
சாகித்ய அகடமி விருதும் பெற்றுள்ளார். நவம்பர் 18, 1982 இல் மறைந்தார். எந்த மொழியானாலும் இலக்கியங்களை தவறாது வாசிக்கும் பழக்கம் உடைய நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமிழறிஞர் தி.ஜா அவர்களின் புத்தகங்களையும் வாசித்து வந்துள்ளார். தி.ஜா அவர்களின் நினைவு நாளான இன்று அவரது சிறப்பில் சிலவற்றை குறிப்பிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
இலக்கியம் என்பது எல்லோருக்கும் புரியாது என்கிற எண்ணமே எழாமல் எளிமையின் எல்லைக்கே சென்று எழுதியவர் தி.ஜானகிராமன். மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள், உயிர்த்தேன் என நாவல்களாகட்டும், மனதின் அடியாழத்தில் பதிந்துவிடும் நடையழகோடு கூடிய சிறுகதைகளாகட்டும் தனது என்கிற முத்திரையைத் தவறாமல் பதித்த மூத்த தலைமுறை எழுத்தாளரான தி.ஜானகிராமனின் நினைவுநாள் இன்று. இந்த நிமிடமும் கால மாற்றத்தால் மதிப்பு மாறிவிடாத அவரது உலகளாவிய படைப்புகளை வாசிப்பதே நாம் அவரை நினைவுகூரும் நல்ல வழி. – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
https://x.com/ikamalhaasan/status/1725726021994037539?s=20
https://x.com/maiamofficial/status/1725776245089259530?s=20