ஜனவரி 23, 2024

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆலோசனை கூட்டம் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள சிறப்புற நடைபற்றது. இந்நிகழ்வுக்கு பின்னர் தலைவரின் முன்னிலையில் மாற்றுதிரனாளிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் மகளிர் உள்ளிட்ட 200 பேர் தங்களை கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் இன்னும் நிறைய நபர்கள் இணைய இருப்பதாக தகவலும் தெரிவித்தனர்.

“தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் முன்னிலையில் மாற்றுத் திறனாளிகள், விவசாய சங்கத்தினர், மற்றும் மகளிர் உள்ளிட்ட 200 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்கள். மேலும் மக்கள் நீதி மய்யத்தின் புதிய மாவட்ட செயலாளர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன்பிறகு மாணவர்களை சந்தித்த தலைவர் நம்மவர், அரசியலின் மாற்றம் மாணவர்களின் கைகளில்தான் உள்ளது என்றும் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” என்றும் எடுத்துரைத்தார்.