சென்னை : ஜனவரி 20, 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் (ஜனவரி) வரும் 23 ஆம் தேதியன்று ஆழ்வார்பேட்டை, தலைமை அலுவலகத்தில் கூடுகிறது.

நிறுவனத் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள் என பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

“நம்மவர் தலைமையில், வரும் 23.01.2024 காலை 11.30 மணியளவில்,நமது கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.”மக்கள் நீதி மய்யம்

#கமல்ஹாசன் #மக்கள்நீதிமய்யம் #KamalHaasan #MakkalNeedhiMaiam