தமிழ்நாடு : வள்ளுவர் ஆண்டு 2055, தை 02
உலகெங்கும் பரவியுள்ளது நம் தமிழ் மொழி, உலகப்பொதுமறை என பெயர்பெற்றது நம் திருக்குறள். மூன்று பால்களும், 133 அதிகாரங்களும், ஒரு அதிகாரத்திற்கு பத்து என 1330 குறள்களும் அடங்கிய ஒப்பற்ற ஓர் வாழ்வியல் நெறிமுறைகளை இரண்டே அடிகளில் விளக்கியுள்ள நூல் திருக்குறள். பதினென்கீழ்கணக்கு எனும் திரட்டில் முப்பால் என பெயரிட்டு வழங்கப்பட்டுள்ள திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். உலக நாடுகளில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பதிப்பிக்கப்பட்டு உலகளாவிய மக்களால் படித்துப் பயன்பெறுகின்ற சிறந்த நூலாக விளங்கி வருகிறது திருக்குறள். இயற்றிய வள்ளுவப் பெருந்தகைக்கு அழகிய தமிழில் சொற்கள் கோர்த்து புகழ்மாலையை சூடியிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.
“ஈரடியால் உலகளந்த ஈடற்ற படைப்பு; ஈராயிரம் ஆண்டுகள் தாண்டியும் தேவை குறையாத கருத்தோடு நிலைத்து மானுட குலத்துக்கு மக்கட்பண்பூட்டும் திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் சொற்களை மனதில் நிறுத்துவோம்“. – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
#Thiruvalluvar #Thirukural #KamalHaasan #ThiruvalluvarDay2024