சென்னை, 02 Feb 2024 :

“தமிழக வெற்றி கழகம்” தொடங்குவதாக இன்று அறிவித்துள்ள நடிகர் விஜய் அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து நம்மவர் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நம்மவர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பல இளைஞர்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்று இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதை நம்மவர் வரவேற்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

2018 ஆம் ஆண்டு ட்விட்டர் இணையத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்வில், நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் உங்களின் தம்பி அவர்கள் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா என்று கேட்டபோது சற்றும் தயங்காமல் “எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் எனக்கு பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்” என்று பதில் அளித்து இருந்தார் நம்மவர்.

ஆரோக்கியமான அரசியலை விதைக்கும் “மய்யம்” போல் “தமிழக வெற்றி கழகம்” செயல்பட வாழ்த்துக்கள்..