சென்னை : மார்ச் 20, 2024
ஆளும் ஒன்றிய அரசைச் சேர்ந்த பெண் அமைச்சர்கள் இருவர் நிர்மலா சீதாராமன் மற்றும் திரைப்பட நடிகை குஷ்பு ஆகிய இருவரும், நமது தமிழக பெண்களை கேவலமான தொனியில் அதாவது கடந்த ஆண்டில் தாக்கிய மிக்ஜாம் புயல் வெள்ள நிவராண நிதி மற்றும் தமிழக அரசின் சார்பில் மாதா மாதம் வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெரும் நமது தமிழக பெண்களை யாசகம் பெறுபவர்கள் எனும் பொருள் பட சித்தரித்து பேசியதும், மேலும் ஒன்றிய பெண் அமைச்சரான ஷோபா என்பவர் இதிலெல்லாம் ஒரு படி மேலே சென்று அண்டை மாநிலமான கர்நாடகத்தில் நடைபெற்ற வெடிகுண்டு விபத்தை தொடர்புபடுத்தி தமிழர்கள் அங்கே சென்று குண்டுவைப்பதாக பேசியதும் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. தராதரம் இல்லாமல் வாய்க்கு வந்தபடி பேசி வரும் பாஜக அரசியல் புள்ளிகளுக்கு தமிழகம் முழுதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. ஆங்காங்கே கட்சி வேறுபாடின்றி அக்கட்சிகளின் மகளிர் அணிகள் உள்ளிட்ட தொண்டர்கள் பலரும் மேற்குறிப்பிட்ட மூன்று பெண்களின் கருத்துகளுக்கு ஆர்ப்பாட்டங்கள் மூலமாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் எமது தமிழ்நாட்டு பெண்களை கொஞ்சமும் மரியாதை இல்லாமல் மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் அதே சமயம் தமிழகத்தின் மண்ணின் மைந்தர் என சொல்லிக் கொள்ளும் தமிழ் தமிழக பாஜக தலைவர் அவரது கட்சி சார்பற்ற நிலை எடுத்து என்னுடன் இணைந்து தமிழக பெண்களை மோசமாக சித்தரிக்கும் அம்மூவர்க்கும் எதிராக குரலெழுப்பி தனது கண்டனங்களை பதிவு செய்யட்டும் என்றும் தனக்கேயுரிய பாணியில் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
I strongly urge ECI to take cognisance of this gross and condemnable speech by Union Minister Shoba BJP, which violates the Model Code of Conduct. I hope that BJP TAMILNADU leadership, as proud sons of the soil, will join me in condemning this hate speech against our people. People of Tamil Nadu will give a befitting response to these deplorable remarks in the upcoming elections on April 19th. – Thiru Kamal Haasan, President, Makkal Needhi Maiam